சன் டிவி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்து பிரபலமானவர் மதுரை முத்து.  தொடர்ந்து தொலைக்காட்சி நகைச்சுவை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.  இந்த நிலையில் கடந்த    பிப்ரவரி 4ஆம் தேதி, முத்துவின் மனைவி வையம்மாள் கார் விபத்தில் சிக்கி பலியானார்.  இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு.
மனைவி இறந்த  துயர சம்பவத்திலிருந்து மீளமுடியா முத்து, அவ்வப்போது தனது மனைவி பற்றிய நினைவுகளை, தனது முகநூல் (பேஸ்புக்)  பக்கத்தில், உருக்கமான பதிவுகளாக வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், அவர் திடீரென இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்கிற குறிப்புடன், ஒரு புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
0
அந்த படத்தில் முத்து, ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படமும் இருக்கிறது.
ஆனால், அந்த புகைப்படம்,  குறும்படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட காட்சிய என மதுரை முத்து விளக்கம் அளித்துள்ளார்.
ஹூம்.. தகவல் தொடர்பு அதிகரிக்க அதிகரிக்க, வதந்திகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன!