சென்னை: மதுரை நகரம் மாமதுரையாக அதாவது அழகான மதுரையாக மாற்றப்படும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரையாக மாற்றியது திமுக அரசு தான். மதுரை நகரம் மாமதுரையாக அதாவது மேலும் அழகான மதுரையாக. அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்றதாக  மாற்றப்படும்.

திமுக ஆட்சிக்காலத்தில் மதுரையில் எண்ணற்ற வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றது. அவை மேலும் அதிகப்படுத்தப்பட்டு மாமதுரையாக மாற்றப்படும்.

மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிதாக மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும்.

மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.500 கோடி செலவில் மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை மத்திய சிறை, புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்படும்.

மதுரையில் உள்ள பல மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டன.  மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலத்திற்கு, முத்து என பெயர் சூட்டியவர் கருணாநிதி.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்பட பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்  மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.