மதுரை:
ன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு விரைவாக செயல்பட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டத்துறை அமைச்சர் உரிய வழிகாட்டுதலோடு விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என ஊடகங்களில் தெரிவித்துள்ளதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்குள்ளாக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.