துரை

57 பிரேத பரிசோதனை அறிக்கைகளில் ஒரே வாசகங்களை கட் அண்ட் பேஸ்ட் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி அடைந்துள்ளது.

மாநிலம் எங்கும் விபத்து, கொலை போன்றவற்றில் மரணம் அடைவோரின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன.   ஓரு சில வேளைகளில் அந்த பரிசோதனை மீது சந்தேகம் எழுப்பப்பட்டு நீதிமன்றம் மறு பரிசோதனைக்கு உத்தரவிடுகின்றது.   இதற்கு முக்கிய காரணம் பிரேதப் பரிசோதனைகள் வீடியோ பதிவு செய்யப்படாதது ஆகும்.

இதையொட்டி சாமிநாதன் என்பவர் மாநிலம் எங்கும் தமிழக மருத்துவ விதிகளின்படி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த சோதனைகளை வீடியோ படமாக்க வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார்.  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளிக்கப்பட்டிருந்த இந்த மனுவில் பிரேதப் பரிசோதனை முடிந்த அன்றே அந்த அறிக்கையை அந்த பகுதி நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோரின் அமர்வு, ”மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவானையில் 2019 ஏப்ரல் 1 முதல் 2019 ஏப்ரல் 15 வரை 178 பிரேத பரிசோதனைகள் நடந்துள்ளன. இவற்றில் 57 பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஒரே வாசகங்கள் இருந்தன. இவை சாலை விபத்து, கொலை, விஷத்தால் மரணம் என பலவகைப்பட்டவை ஆகும்

இதன் மூலம் ஒரே அறிக்கையில் உள்ள வாசகங்கள் கட் அண்ட் பேஸ்ட் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனதெரிய வந்துள்ளது.   ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எதிலும் மாறுதல் இல்லை.  மேலும் சிசிடிவி பதிவுகளின்படி இந்த உடல்களின் அளவுகள் எடுக்கப்படவில்லை,  எனவே இந்த 57 அறிக்கைகளும் ஒரு அறிக்கையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என உறுதி ஆகி உள்ளது.

உடல்களில் உள்ள அங்க அடையாளங்களும் காப்பி அடிக்கப்பட்டுள்ளன. இரு அறிக்கைகளில் நெஞ்சின் இடது பக்கத்தில் கருப்பு மச்சம் எனவும் வயிற்றின் வலது பக்கம் சுற்று மச்சம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் மருத்துவமனையில் பல மருத்துவர்கள் பணியில் இருந்தும் ஒரே மருத்துவர் தினசரி 10 – 17 பரிசோதனைகள் வரை செய்துள்ளார்.    இது சாத்தியமற்றதாகும்.

இவ்வாறு ஒரே அறிக்கையின் வாசகங்கள் பல அறிக்கைகளில் காப்பி செய்யபட்டுள்ள்தால் அந்த பரிசோதனைகள் நடந்துள்ளனவா எனச் சந்தேகம் எழுந்துள்ளன.   ஒரு கொலை அல்லது தற்கொலை வழக்குக்கு ஆதாரம் பிரேத பரிசோதனை அறிக்கையாகும்.  அதில் தவறு இருந்தால் அது நீதிமன்ற நடவடிக்கைகளையும் தவறாக்கும்.  நாட்டில் மிகவும் மதிப்பான நிலையில் உள்ள மருத்துவர்கள் இவ்வாறு செய்வது அவமானமாகும்.

மேலும் மருத்துவர் இல்லாமலே பிணவறை ஊழியர்கள் மூலம் பரிசோதனைகள் நடந்துளத்கும் தெரிய வந்துள்ளது.   அப்போது உடல்களை வெட்டி தைத்து விட்டு எவ்வித சோதனையும் நடத்தாமல் முந்தை அறிக்கைகளின் வாசகங்களை காப்பி அடித்து புதிய அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சந்தேகம் கொண்டுள்ளது  இது குறித்து கேள்விகள் எழுப்பியவருக்குச் சிலரால் மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பல மருத்துவர்கள் பணிக்கு வராமல் வந்ததாகக் கையெழுத்து போட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது    அவர்கள் தங்கள் பணிகளை வேறு மருத்துவருக்கு அளித்து செய்யக் கோரிக்கை விடுத்டுளனர்.  எனவே இவர்கள் வராத நாட்களிலும் பிரேதப் பரிசோதனை செய்ததாகக் காட்ட முந்தைய அறிக்கைகளில் உள்ள வாசகங்களை பயன்படுத்தி இருக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது” என் தெரிவித்துள்ளது.