மதுரை, 

துரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடுத்தும், இரண்டு வருடத்திற்கு பிறகும் தற்போது நடைபெற இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஏதுவாக வாடிவாசல் புதுப் பொலிவுடன் தயார் நிலையில் உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை காலை 10 மணிக்கு தொடங்கி  பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறும். இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 450 காளைகள்  முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவனியாபுரம் வாடிவாசல் பெயின்ட் அடிக்கப்பட்டு புதுப்பொலி வுடன் காட்சியளிக்கிறது. காளைகள் நிறுத்தி வைக்கப் படும் வாடிவாசல் தொழுவத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டினரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள்,  சிறப்பு அழைப்பாளர்கள் அமருவதற்காக தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சுமார் 30ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றி 8 அடி உயரத்தில் தடுப்பு ப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் உச்சநீதி மன்ற வழிகாட்டுதல்படி அனைத்து நிகழ்வுகளும் வீடியோவாகவும் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அவனியாபுரம் சென்று ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். அவருடன் கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.

மதுரை கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.