சென்னை: சென்னையில் தனது முதல் ஆண்டு இளங்கலை படிப்பைப் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது விடுதி அறையின் கூரையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

கடைசியாக நவம்பர் 8 ஆம் தேதி இரவு மற்ற விடுதிவாசிகளால் காணப்பட்ட மாணவி, இன்று காலை தனது தாயிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“மாணவியின் தாய் பின்னர் விடுதியில் ஒருவரை அழைத்து தனது மகளைத் தேடுமாறு கேட்டுக்கொண்டார்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

விடுதியிலிருந்தோர் கதவைத் திறந்து பார்த்த போது அவர் மின்விசிறியில் சுருக்கிட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், அவர்கள் உடலை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  கொல்லத்தில் உள்ள மாணவியின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும், முதற்கட்ட விசாரணையில் மாணவி தனது படிப்பு பற்றி கவலைப்பட்டு வந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

, ஐ.ஐ.டி சென்னை மாணவியின் மரணம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தையும் சோகத்தையும் இவ்வாறு வெளிப்படுத்தியது. “ஐ.ஐ.டி சென்னையின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இறந்த மாணவியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மற்றும் அன்பானவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது உண்மையில் நிறுவனத்திற்கும் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.” போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் நிறுவனம் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறது என்று நிறுவனத் தலைமை தெரிவித்துள்ளது.