சென்னை: ”நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23  புலியை உடனே கொல்ல வேண்டாம் சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது.  டி 23 எனப் பெயரிடப்பட்ட அந்த ஆண் புலி உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறி  கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வருகிறது.

இந்த புலியின் தாக்குதலுக்கு இதுவரை 4 மனிதர்கள் மற்றுங்ம , 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை புலி தாக்கியது. இதில் கடுமையான காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்த புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறி  கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள்  வனத்துறையினரிடம் புகார்கொடுத்தனர். மேலும், சாலைமறியல் போராட்டமூம் நடத்தினர். இதையடுத்து, டி 23 புலி இதுவரைஇதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். தொடர்ந்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர், மருத்துவர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடி வருகின்றனர். இன்று 11வது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், T23 புலியை  சுட்டுக்கொல்லக்கூடாது என்றும், வனத்துறையினரின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தெலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொர்ந்து,  தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, “உடனே புலியை கொல்ல வேண்டாம்; T23 ஆட்கொல்லியாக இல்லாமலும் இருக்கலாம், நம்மிடம் குறைந்த அளவே புலிகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

அப்போது வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புலியை உயிரோடு பிடிக்கவே விரும்புகிறோம் என கூறியதுடன், புலி நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்டறிய அதவை என்ற சிப்பிப்பாறை நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலமும் புலியின் இருப்பிடத்தை அறிய வனத்துறையினர் முயற்சி செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பிடியில் அகப்படமால் புலி சுற்றி வருகிறது.. மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். புலி நடமாட்டம் காரணமாக சிங்காரா, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியதுடன், 11-வது நாளாக வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், நீலகிரியில் தேடப்பட்டு வரும் டி23 புலியை கொல்ல வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதுடன்,  புலியை பிடிக்கும்போது மற்ற விலங்கினங்களுக்கும் இடையூறு செய்யக்கூடாது என்று கூறியுள்ளது.