சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் திரையரங்கு வாகன நிறுத்தத்துக்கு வழங்கப்பட்ட, 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பிரபலமான திரையரங்கான  ‘மாயாஜால்’ திரையரங்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்கா  செயல்பட்டு வருகிறது. அந்த திரையரங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 ஏக்கர் இடம், அந்த தியேட்டரின் வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

.அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை, நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பித்துள்ள மாயாஜால் நிறுவனம் அதற்கு முறையான அனுமதி இன்னும் கிடைக்காத நிலையில்,, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணையுடன், அரசு நிலம் என்ற தகவலை மறைத்து, 2 ஏக்கர் இடத்திற்கு பட்டா கேட்டு, காஞ்சிபுரம் தாசில்தாரருக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்க, 2015ல் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் தாசில்தார் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண் ஆஜராகி, ”குறிப்பிட்ட நிலம் தொடர்பான பல உண்மை தகவல்களை, தனி நீதிபதியிடம் மறைத்து பட்டா பெற்றுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும்,” என, வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள், மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனால், மாயாஜால் வாகன நிறுத்தம்