சென்னை: தமிழகம், புதுசேரி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம், தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மே 2 ம் தேதி டி.என் & புதுச்சேரியில் வாக்குகளை எண்ணும் நாளில், வெற்றி தொல்வி தொடர்பாக அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவிப்பது வழக்கம். ஆளால், இந்த முறை, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, வழக்கறிஞர் அஜய் பிரான்சிஸ் லயோலா  என்பவர்,  பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.