சென்னை:  அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் படம் வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகஅரசின் அனைத்து அரசாங்க கட்டிடங்களிலும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உருவப்படங்களை காட்சிப்படுத்துமாறு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமைநீதிபதி, மனுதாரர் தேவையென்றால், அனைவரது படங்களையும்  தனது வீட்டிற்குள்  இலவசமாக காட்சிப்படுத்தலாம் என்று சாடியதுடன், வழக்கு தள்ளுபடி செய்தார். மேலும் அவருக்கு ரூ .10,000 அபராதம் விதித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பெஞ்சின் வெளிப்படையான அனுமதியின்றி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொதுநல வழக்கு தொடரவும் தடை விதித்தார்.