’மண்டேலா‘ : 2 தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின்

Must read

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் மடோன் அஸ்வின் தனது முதல் படைப்பான மண்டேலா படத்திற்கு விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனங்களுக்கான இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

பஞ்சாயத்து தேர்தலை மையமாக வைத்து அரசியல் நையாண்டி படமாக எடுக்கப்பட்ட மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபு நடித்திருந்தார்.

2021 ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளிவந்த இந்தப் படம் அதன் பின் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் வெளியானது.

“நீ ஜெயிச்சா என்ன செய்வ?”, “நான் பதவிக்கு வந்தா ஊர் மக்கள் எல்லார் அக்கவுன்டுலையும் 12 ஆயிரம் பணம் போடுவேன்”, “ஓட்டு மட்டும் இல்லன்னா உன்ன அறுத்துப் போட்ருவோம்” என யதார்த்த வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.

‘ஓட்டுக்குத் துட்டு’ என்ற அரசியலை நையாண்டியாக வெட்ட வெளிச்சமாக்கிய படம் மண்டேலா.

இந்த படத்திற்காக அதன் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது குறித்து திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article