போபால்:

மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் 40 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் டாக்டர் ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள ராணி லட்சுமி பாய் மாணவிகள் விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் விடுதியின் கழிப்பிடத்தில் திறந்த வெளியில் மாதவிடாய்க்கு பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் கிடந்துள்ளது. விடுதி காப்பாளரான பேராசிரியர் சந்தா பென் பல முறை இது போன்று திறந்த வெளியில் போட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கையும் மீறி தற்போது திறந்த வெளியில் கிடந்ததால் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது திறந்தவெளியில வீசிய மாணவியை அடையாம் காண, 40 மாணவிகளையும் தனித்தனியே ஆடைகளை அவிழத்து யாருக்கு மாத விடாய் ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. துணைவேந்தர் ஆர்.பி. திவாரியை மாணவிகள் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் உறுதியளித்துள்ளார். இது குறித்து பதிலளிக்க விடுதி காப்பாளர் சந்தா பென் மறுத்துவிட்டார்.