சென்னை:

2 அரசு நிறுவனங்களின் செயல்பாடு மூலமாக தான் ஆதார் தகவல்கள் கசிந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய குடிமகன்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய ஆதார் அடையாள எண்ணை மத்திய அரசு வங்கியுள்ளது. சொத்து வாங்குவது, வங்கி நடவடிக்கைகள், செல்போன்ல காஸ் இணைப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசு சலுகைகளை பெற ஆதார் அத்தியாவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தனி மனித ரகசிய தகவல்கள¬ உள்ளடக்கிய ஆதார் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த விவரங்கள் கசிவதாக தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது. ரகசியங்கள் கசிவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆதாரை செயல்படுத்தும் உதாய் அமைப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் கசிவை தடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.

‘இசட் டி நெட்’ என்ற சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று ஆதார் விவரங்கள் கசிந்து வருவது குறுத்து ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில தகவல்கள் ஆதார் மூலம் எளிமையான முறையில் கிடைப்பதாக தெரிவித்து, அதற்குறிய ஆதாரங்களையும் வெளியிட்டது. இது குறுத்து தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் கரண்சைனி கூறுகையில், ‘‘ஆதார் விபரங்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை. அதில் இருந்து தகவல்களை எளிதாக எடுத்து விட முடிகிறது.

ரகசியங்கள் கசிவை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் போதுமானதாக இல்லை.ஆதார் மூலம் எடுக்கப்படும் தகவல்கள் கசியும் வகையில் 2 அரசு பொதுத்துறை நிறுவனங்கள்செயல்படுகின்றன. அதை தடுக்க முறையான நடவடிக்கை இல்லை. கம்ப்யூட்டர் தகவல்களை ‘ஹேக்’ செய்பவர்கள் தகவல்களை எளிதாக திருட முடியும். அதை தடுக்க சரியான நடைமுறை எதுவம் பின்பற்றப்படுவது இல்லை’’ என்றார்.