சென்னை:
ருத்துவ சீட் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ரூ.75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரி நிறுவனர் பச்சமுத்துவை போலீசார் காவலில் எடுத்தது விசாரித்து வருகின்றனர்.  அவரிடம் பண மோசடி, மாயமான மதன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
pachamuthu4
சென்னை புழல் சிறையில் இருந்து பச்சமுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மருத்துவ சீட்  மோசடி புகார் தொடர்பாக பச்சமுத்துவிடம் 10 மணி நேரம் போலீசார் விசாரிக்க உள்ளனர். பச்சமுத்துவிடம் 5 நாள் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் ஒரு நாள் மட்டும் விசாரணை நடத்த நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி புதன்கிழமை காலை முதல் மாலை வரை பச்சமுத்துவிடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் பச்சமுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
பச்சமுத்துவின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை, செப்டம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் சேர்க்கைக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டையடுத்து, பச்சமுத்து மீது குற்றவியல் சட்டத்தின் 406, 34, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.