சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார்.

மாநாடு படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை SSI ப்ரொடக்ஷன் சார்பாக சுப்பையா சண்முகம் கைப்பற்றியுள்ளார்.மேலும் படத்தின் வெளிநாட்டு உரிமைகள் குறித்த தகவலையும் படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]