மு.க. ஸ்டாலின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் – நெல்லை கண்ணன்

Must read

சென்னை: 
.உ.சி.க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 150வது பிறந்த நாளையொட்டி, கோவை வ.உ.சி., பூங்காவில், அவரின் உருவச் சிலை நிறுவப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்கு முதல்வருக்கு  எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், சென்னை காந்தி மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாருக்கு மார்பளவு சிலை, கோவை அவர் சிறையிலிருந்த இடத்தில் முழு உருவச் சிலை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வ.உ.சி. க்கு மரியாதை, கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது என்று குறையே சொல்ல முடியாத ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.  செக்கிழுத்த செம்மலுக்கு மிகப்பெரிய மரியாதை செய்த மு.க.ஸ்டாலின் வயதில் இளையவரென்றாலும் அவரது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article