புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Must read

சென்னை:
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லை மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலிருந்து தமிழகம் வருவோரைத் தீவிரமாக பரிசோதனையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வைரஸ் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

More articles

Latest article