சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள  நிலவரம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.

அதனால் 108 இடங்களை பிடித்த தவெக ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. அந்த கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, கூட்டணியை முறித்துக்கொண்டு, ஆதரவி அளித்துள்ளது. இது இரு கட்சிகளுக்கும் இடையே மோதலாக உருவாகி வருகிறது.

இதற்கிடையில்  திமுக கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது. இதன் காரணமாக, அக்கட்சிகள் இன்று மாலைக்குள் விசிக, இடதுசாரிகள் அவர்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,  திமுகவும் அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவின் மூத்த நிர்வாகிகளான டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

[youtube-feed feed=1]