சென்னை:
“Happy Streets” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை “Happy Streets” நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விளையாட்டு, பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.