தமிழக துணை முதல்வர் பயணம் செய்த  சொகுசுக்கார் கிளப்பும் சர்ச்சைகள்

Must read

சென்னை

மிழக துணை முதல்வர் பயணம் செய்த ரேஞ்ச் ரோவர் சொகுசுக்கார் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது.

கொரோனா பரவுதலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25 முதல் நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    அதன் பிறகு ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே மாதம் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   ஊரடங்கு அறிவித்து சில தினங்களில் அதாவது மார்ச் 30 அன்று தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் கோயம்பேடு காயகறிச் சந்தையை ஒரு ரேஞ்ச் ரோவர் சொகுசுக் காரில் வந்து பார்வை இட்டார்.

கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா பரவுதலின் மையப்புள்ளி ஆகி உள்ளது  அதே வேளையில் அந்த சந்தைக்கு ஓ பி எஸ் வந்த டி என் 05 சி இ 2345 என்னும் ரேஞ்ச் ரோவர் சொகுசுக் கார் ஒரு சில சர்ச்சைகளின் மையப்புள்ளி ஆகி உள்ளது.

இந்த சொகுசுக் கார் 2019 மாடலாகும்.  இந்த வாகனம் விஜயந்த் டெவலப்பர்ஸ் பி லிமிடெட் என்னும் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.    இந்த நிறுவனம் ஓ பி எஸ் மகனும் மக்களவை உறுப்பினருமான ஓ பி ஆர் என அழைக்கப்படும் ரவீந்திர குமார், இளைய மகன் ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்டதாகும்.   இந்த கார் கடந்த 2019 பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் கடன் மூலம் வாங்கப்பட்டுள்ளது.

விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனம் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கட்டிடங்கள் கட்டும் நிறுவனமாக தொடங்கப்பட்டுள்ளது.  ஓ பி ஆர் மற்றும் ஜெயப்ரதீப் ஆகிய இருவ்ரும் விஜயந்த் டெவலப்பர்ச்,வில்லோனெட் எக்சிம்,விஜயந்த் காஸ்மிவ் பவர் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களில் மட்டும் இயக்குநர்களாக உள்ளனர்.  இதில் விஜயந்த் காஸ்மிக் பவர் என்னும் நிறுவனம் ஊரடங்குக்கு சில தினங்கள் முன்பு அதாவது 2020 ஆம் வருடம் மார்ச் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குத் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய பணி கிடைத்துள்ளது.  திருப்பூரில் திருமுருகன் பூண்டியில் உள்ள ராக்கியாபாளையம் எனும் இடத்தில் வீட்டு வசதி குடியிருப்புக்களை உருவாக்கும் அந்த பணியில் 76 வழக்கான பிளாட்டுகளுக்கு , 41 வருவாய் குறைந்தோருக்கான பிளாட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.    இதற்கான அனுமதி 2020 ஆம் வருடம் ஜனவரி 20 அன்று அளிக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டுமானத்தின் மொத்த பரப்பளவு 9.02 ஏக்கர்கள் ஆகும்.

சென்னைக்கு வெளியில் இத்தகைய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கும் டி டி சி பி துறையை ஓ பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார்.   அதாவது துணை முதல்வரின் மக்களின் கட்டுமான நிறுவனத்துக்கு அவரே அமைச்சராக இருந்து அனுமதி அளித்துள்ளார்    இது தற்போது பல சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது   இந்த நிலம் வழங்குவதற்கான அனுமதி கோரி கடந்த 2019 ஆம், வருடம் ஜெயப்ரதீப் விண்ணப்பித்துள்ளார்

அந்த விண்ணப்பத்தில் நிறுவனம் இந்த பணிக்காக மட்டும் மந்தைவெளியில் உள்ள சிடி யூனியன் வங்கியில் கணக்கு இயக்குவதாக உறுதி அளித்துள்ளது.   அத்துடன் இட ஒதுக்கீடுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் 70% இந்தக் கணக்கில் முதலீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன் பிறகு ஒதுக்கீட்டுதாரரகள் அளிக்கும் தவணைகளும் இதே கணக்கில் வரவு வைக்கைப்ப்டும் எனவும் தெரிவிக்கபட்ட்டுள்ள்து.   இந்த கட்டுமான பணியின் மொத்த மதிப்பு சுமார் ரூ.500 கோடி என கூறப்படுகிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஓபிஆர் அளித்த வேட்புமனுவில் அவருக்கு விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் ரூ.33,340 மதிப்புள்ள பங்குகள் உள்ளதாகவும்   இதைத் தவிர விஜயந்த் நிறுவனம் ஓ பி ஆர் இடம் இருந்து  ரூ.36.52 லட்சம் கடன் வாங்கி உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுளது.  மேலும் ஓபிஆர், அவருடைய சகோதரர் விஜயபிரதிப்பிடம் ரூ 33 லட்சம், சகோதரி கவிதா பானுவிடம் ரூ.83 லட்சம், குளோபல் ஹோம் ரியாலிட்டி நிறுவனத்திடம் ரூ.4.92 லட்சம், ஜெயம் விஜயம் நிறுவனத்திடம் இருந்து ரூ.43.26 லட்சம் மற்றும் சிடி யூனியன் வங்கியில் இருந்து ரூ.1.41 கோடி ,மற்றும் வாகனம் வாங்க எச் டி எஃப் சி வங்கியில் இருந்து ரூ.21.63 லட்சம் கடன வாங்கி உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்து.

அடுத்ததாக ஒ பி ஆர் இந்த விண்ணப்பங்களில் அளித்துள்ள தனது இல்ல முகவரி மேலும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.  நிறுவனத்தின் இயக்குனர்களான ஜெயப்ரதீப் மற்றும் கவிதா பானு வேறு வேறு முகவரிகள் அளித்துள்ள போது ஓ பி ஆர் தனது தந்தையின்  கிரீன்வேஸ் சாலை முகவரியை அளித்துள்ளார்.   இந்த வீடு துணை முதல்வர் பணிக்காக ஓ பன்னிர்செல்வ்த்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்து எவ்வித வர்த்தக நடவடிக்கைகளும் செய்யக் கூடாது என்பது சட்டமாகும்.

வேட்பு மனுவில் ஓ பி ஆர் கடந்த 10 வருடங்களாகத் தாம் எந்த ஒரு அரசு இல்லத்திலும் வசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் துணை முதல்வரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தின் முகவரியை அவருடைய மகனான ஓ பி ஆர் கடன் விண்ணப்பத்தில் பயன்படுத்தி உள்ளார்.  இது நடத்தை விதிகளின் கீழ் வருமா எனவும் சர்ச்சை எழுந்துள்ளது.

நாம் மீண்டும் ரேஞ்சர் ரோவ்ர் கார் விவகாரத்துக்குச் செல்வோம்.  இது ஓ பி  எஸ் அலுவலக வாகனம் இல்லை.  அவருக்கு டி என் 6 பிஜி, 2345 என்னும் இன்னோவா வாகனம் ரூ.19.46 லட்சத்துக்கு வாங்கப்பட்டு அவர் துணை முதல்வரான பிறகு அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு முதல்வராக இருந்த போது ஓ பி எஸ் பயன்படுத்திய வாகனமும் இது கிடையாது.  அந்த வாகனம் தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கபப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Thanks : THE WEEK

More articles

Latest article