சென்னை

லுப்தான்சா  ஊழியர்கள் இரண்டாம் முறையாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்;

Frankfurt, Germany – July 24, 2016: Aerial view of Lufthansa aircraft parked at Frankfurt Airport (FRA), which serves as the largest hub for Lufthansa.

இரண்டாம் முறையாக லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  எனவே ஜெர்மனியின் பிராங்க் பர்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊழியர்கள் போராட்டத்தால் இன்று விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இதனால் சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜெர்மன், கனடா, நெதர்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் சென்னையில் இருந்து நேரடியாக பிராங்க் பர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.