சென்னை

மிழகத்தில் முதல் முறையாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானிதி சீனிவாசன் அலுவலகத்துக்கு ஐ எஸ் ஓ  தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

இன்று தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் புரிந்துள்ள முதல் சட்டமன்ற உறுப்பினர். நான்தான். ஒரு சட்டமன்ற உறுப்பினர். என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்தது. இந்த தரச்சான்றைப் பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேச தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த சாதனையைச் சபாநாயகர் அப்பாவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன்.”

என்று தெரிவித்துள்ளார்.