துரை

ல பாஜகவினர் அதிமுகவில் இணைவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் செய்தியாளர்களிடம்,

”எத்தனை கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றன என்று பொறுத்திருந்து பாருங்கள். யாராலும் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது என உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.  அதிமுக கூட்டணி தொடர்பாகப் பொறுத்திருந்து பாருங்கள், தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் கூட்டணி முழுமைபெறும்.

பாரும் பாஜகவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். ஒருவர் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி செல்வது அவரவர் ஜனநாயகம். எனவே அதை யாரும் தடுக்க முடியாது, இந்தியா ஜனநாயக நாடு  என்பதால் யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

பாஜகவுக்குச் சிலர் அ.தி.மு.க.வில் இருந்து செல்கின்றனர் என்றால் அது அவரவர் மனநிலையைப் பொறுத்து உள்ளது. தேர்தலில் போட்டியிட சீட் அளிப்பது அரசியல் வாரிசு அல்ல.  மாறாகத் தலைமை பொறுப்பு என்பதுதான் அரசியல் வாரிசு.

முதலில் தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தார் அதன்பின் அந்த கட்சிக்கு மு.க.ஸ்டாலின் தலைவரானார். அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. தலைவராக்க முயற்சி செய்கின்றனர். இதுதான் வாரிசு அரசியல்”

என்று கூறியுள்ளார்.