உத்தரபிரதேசம்:

த்தரபிரதேச இந்து அமைப்புகளிடமிருந்து புகாரை பெற்ற பின்னர், லக்னோ காவல்துறையினர் இந்து மணமகள் மற்றும் முஸ்லிம் மணமகனின் திருமணத்தை நிறுத்தினர், இரு வீட்டாரின் சம்மதம் இருந்தபோதிலும், திருமணத்தை நிறுத்தியது லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று லக்னோ டுடா காலனியில் நடைபெறவிருந்த இந்து பெண் மற்றும் முஸ்லிம் மணமகன் திருமணத்தை, இரு வீட்டாரின் சம்மதம் இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் நிறுத்திய பாரா காவல் நிலைய போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு திருமணத்தை நடத்துமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த திருமணம் இந்து முறைப்படி நடக்கவிருந்ததாகவும், 22 வயது இந்து மணமகளும் 24 வயது முஸ்லிம் மணமகனும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் வரும் வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர், என்று பாரா காவல் நிலைய காவல்துறை அதிகாரி த்ரிலோக் சிங் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய யுவா வாஹினியின் பிரதிநிதிகள் சிலர், வற்புறுத்தலின் பேரில் இந்த திருமணம் நடைபெறுகிறது என்று தெரிவித்ததால் நாங்கள் இந்த திருமணத்தை நிறுத்தினோம், ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு மணமகள் இந்து என்றும் மணமகன் முஸ்லிம் என்றும் தெரியவந்தது, முஸ்லிம் மணமகன் இந்துவாக மாற ஒப்புதல் அளித்து திருமணமும் இந்து முறைப்படி நடக்கவிருந்தது, மேலும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்கவிருந்தது, ஆனால் நாங்கள் புதிய மதமாற்ற சட்டத்தின் கீழ் நீங்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம், இதற்கு சம்மதித்த இருவீட்டாரும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் வந்த பிறகு திருமணத்தை நடத்துவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர், என்றும் காவல்துறை அதிகாரி த்ரிலோக் சிங் தெரிவித்துள்ளார்.