இந்தியாவில் லூகா வரும் 30 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இத்தாலியை பின்னணியாகக் கொண்டு லூகாவின் கதை எழுதப்பட்டுள்ளது. நீரில் விலங்கு தோற்றத்தில் இருக்கும் சிறுவன் லூகா நிலத்தில் சாதாரண மனித உருக்கொள்ளும் திறமை கொண்டவன். இவனைச் சுற்றி கதை எழுதப்பட்டுள்ளது. என்ட்ரிகோ கேஸரோஸா படத்தை இயக்கியுள்ளார்.

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஓர் அங்கமான Pixar அனிமேஷன் ஸ்டுடியோ உலகப் பிரசித்தமானது. 1995 இல் டாய் ஸ்டோரி படத்தை இவர்கள் உருவாக்கினார்கள். இதுவரை 24 முழுநீள திரைப்படங்கள் பிக்ஸர் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது. அனைத்துப் படங்களுமே தரமானவை. உலக அளவில் கவனம் பெற்றவை.