நாமக்கல்

மிழகம் உட்பட 6 மாநிலங்களில் நாளை முதல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தென்மண்டல எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது.    இந்த சங்க உறுப்பினர்களுக்கு மொத்தம் 4200 எரிவாயு டேங்கர் லாரிகள் உள்ளன.  இவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எரிவாயு நிரப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் உள்ளன.   இவை 7 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 47 நிரப்பும் மையத்தை இணைக்கின்றன.

இதற்கான வாடகை ஒப்பந்தம் கடந்த 2017 அக்டோபருடன் முடிவடைந்தது.   எண்ணெய் நிறுவனங்கள் 6 மாதத்துக்கு பழைய ஒப்பந்தத்தை நீட்டித்தன.   அதுவும் வரும் ஏப்ரலுடன் முடிவடைவதால் புதிய ஒப்பந்தப் புள்ளிக்கு அழைப்பு விடுத்துள்ளன.    தற்போது மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவில் ஒப்பந்தம் போட உள்ளன.    இதனால் சங்கத்தினர் நாடெங்கும் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி மண்டல வாரியாக ஒப்பந்தம் போடக் கோரி நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுளது.    இந்தப் போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன் காரணமாக எரிவாயு சிலிண்டர் சப்ளை பெரிதும் பாதிக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.