குறைந்த இலக்கு என்றால் எதிரணிகளுக்கு அலர்ஜியா? – ஒரு ஐபிஎல் சுவாரஸ்யம்!

Must read

நடப்பு 14வது ஐபிஎல் தொடரில், ஏப்ரல் 9 முதல், நேற்றுவரை நடைபெற்ற போட்டிகளை கவனித்தால், ஒரு சுவாரஸ்யத்தை தெரிந்து கொள்ளலாம்.

முதலில், பேட்டிங் செய்யும் அணி, பெரிய இலக்கை நிர்ணயித்தால், இரண்டாவதாக சேஸிங் செய்யும் அணி, அந்த இலக்கை ஆக்ரோஷமாக விரட்டும். இலக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும்கூட, வெற்றிபெற முடியாத நிலை வந்தாலும், அருகில் வந்தே தோற்கும்,

சென்னை அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வென்றது டெல்லி அணி. பஞ்சாப் நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை, 217 ரன்கள் வரை விரட்டி தோற்றது ராஜஸ்தான். கொல்கத்தா நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை, 177 வரை விரட்டிவந்து தோற்றது ஐதராபாத்.

மேலே கண்ட உதாரணங்கள் ஒருபக்கம். ஆனால், இத்தொடரின் இதுவரையான மற்றொரு பக்கத்தையும் பார்க்கலாம்.

* முதல் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 160 ரன்கள் என்ற சிறிய இலக்க‍ை, மிகவும் சிரமப்பட்டு, 8 விக்கெட்டுகளை இழந்து, கடைசிப் பந்துவரை போராடியே எட்டியது பெங்களூரு அணி.

* மும்பை அணி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி, 15 ஓவர்கள் வரை, வெற்றிக்கான நம்பிக்கையை விதைத்தாலும், எளிதாக வெல்ல வேண்டிய ஒரு போட்டியை, 10 ரன்கள் வித்தியாசத்தில் கோட்டைவிட்டது. 142 ரன்களையே எடுத்தது அந்த அணி. 7 விக்கெட்டுகளையும் இழந்தது அந்த அணி.

* ‍பெங்களூரு அணி நிர்ணயித்த 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஐதராபாத் அணியும், எளிதாக வெற்றிபெறும் என்றே நம்பப்பட்டது. ஆனால், கடைசி ஓவர்களில் சொதப்பி, 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 143 ரன்களையே எடுத்து, 6 விக்கெட்டுகளில் தோற்றது ஐதராபாத் அணி.

ஆக, அதிக இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், ஆக்ரோஷமாக ஆடி இலக்கை விரட்டுவதும், குறைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், கடைசி ஓவர்களில் திணறிப்போவதும், கடந்த 6 நாட்களில், ஐபிஎல் தொடரில் நிகழ்ந்துள்ளது.

 

 

More articles

Latest article