சென்ன‍ை: பெங்களூரு அணிக்கெதிரான லீக் போட்டியில், குறைந்த இலக்கான 150 ரன்களை எட்ட முடியாமல், கடைசி கட்டத்தல் சொதப்பி, 6 ரன்களில் வீழ்ந்தது ஐதராபாத் அணி.

இதன்மூலம், தான் இதுவரை ஆடிய 2 லீக் போட்டிகளிலும் தோற்றுள்ளது ஐதராபாத். பெங்களூரு அணி, தான் ஆடிய 2 லீக் போட்டிகளிலும் வென்றுள்ளது.

பெங்களூரு அணி நிர்ணயித்தது 150 ரன்கள் மட்டுமே. அதைநோக்கி நிதானமாக ஆடிவந்தது ஐதராபாத். ஆனால், அரைசதம் அடித்த கேப்டன் டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும், அனைத்தும் மாறத் தொடங்கியது.

மணிஷ் பாண்டே, பேர்ஸ்டோ, அப்துல் சமது, விஜய் சங்கர் என வரிசையாக காலியானார்கள். இடையில், சற்று நம்பிக்கையளித்தார் ரஷித் கான். 9 பந்துகளில் அவர் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கெடுவாய்ப்பாக ரன்அவுட் ஆனார். இதனால், நம்பிக்கை சுக்குநூறாக தகர்ந்தது.

இறுதியில், நதீமும் டக்அவுட்டாக, கடைசிப் பந்தில் 8 ரன்களை எடுத்தாக வேண்டிய தேவை ஏற்படவே, 1 ரன் மட்டுமே எடுத்து, 6 ரன்களில் வீழ்ந்தது ஐதராபாத் அணி.