சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18ம் தேதி வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், வரும், 19ம் தேதி வரை, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும், . அவ்வப்போது, சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.