சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும், குறைந்த காற்றத்த தாழ்வு ஆழ்ந்த காற்றத்த தாழ்வுப் பகுதியாக மாறுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல் குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதனைத் தொடர்ந்து, 48 மணி நேரத்தில், வடக்கு, வடமேற்கு நகர்ந்து ஆழ்ந்த காற்றத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதனால், தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று கன்னியாக்குமரி, நெல்லை, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,மதுரை,தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை கடற்கரையில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.