விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தை, இணையத்தில் திருட்டுத்தனமாக பாருங்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் ரவிசங்கர், சங்க உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பி வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளட்டில்  அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான மெர்சல் திரைப்படம், மத்திய பாஜகவின் ஜி.எஸ்.டி. உட்பட சில நவடிக்கைகைளை விமர்சிப்பதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து அக் காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேறு ஒரு இடத்தில் இருந்து மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்தும் படத்தில் விஜய், வசனம் பேசுகிறார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இக்காட்சிகள் மருத்துவர்களை இழிவு படுததும் காட்சிகள் இருப்பதாக மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இந்திய மெடிக்கல் அசோசியேசன் தலைவர் டாக்டர் ரவிசங்கர், இணையத்தில் வெளியான மெர்சல் படத்தின் முழுப்பட லிங்க்கை மருத்துவர்களுக்கு அனுப்பி வருகிறார். இது சட்டத்துக்குப் புறம்பானது என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனாலும் ரவிசங்கர், “ மெர்சல் படம், மருத்துவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.  அப்படத்திற்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் எங்களது கருத்தை பகிர்வோம்.  எங்களின் தாக்குதல்களை  அவர்கள்  உணர முடியும் என்று நான் நம்புகிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

மெர்சலுக்கு எதிராக, அந்த படத்தின் வீடியோ பதிவு குறித்த லிங்கை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார். “ இதை ஒவ்வொருவரும் பகிர வேண்டும். திரையரங்கு சென்று மெர்சல் படத்தைப் பார்க்கக்கூடாது” என்று வலியுறுத்தி பதிவிட்டு வருகிறார்.

அவரின் இந்த கருத்துக்கு,  இந்தியாவின் மருத்துவர்கள் சங்கம், இந்திய மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சங்கம், இந்திய ரேடியலாஜிஸ்ட்ஸ் மற்றும் இமேஜிங் அசோசியேசன் உள்பட பல்வேறு மருத்துவ சங்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து உள்ளன.

பைரசி என்பது சட்டத்துக்குப் புறம்பானது. நீதிமன்றங்களும் இது குறித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இந்த நிலையில் மருத்தவர் சங்கமே படத்தின் பைரசியை பரப்புவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவிர பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் மருத்துவர்தான். அவருக்கும் இந்த பைரசி லிங்க் அனுப்பப்பட்டதா..அவரும் இதில்தான் பார்த்தாரா என்பது தெரியவில்லை.