லண்டன்,
பிரிட்டன் தலைநகர் லண்டன் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு புதிய பிரதமர் தேரசாமே பங்கேற்று சிறப்பித்தார்.
london
கடந்த ஜூலை 13ந்தேதி புதிய பிரதமராக கர்சர்வேடிவ் கட்சியை சார்ந்த தெரசாமே பதவி ஏற்றார். தீபாவளி கொண்டாட்டத்தின்போது  பேசிய பிரதமர் தெரசா மே இந்தியாவுடனான வர்த்தக உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
லண்டனில் இந்த வாரம் முழுவதும் ஆங்காங்கே தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்று வருகின்றன.
பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் இந்தியர்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளியை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள இந்திய வம்சாவழியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில்  தெரசாமே உற்சாகமாக கலந்துகொண்டார். அப்போது இந்தியர்களிடையே பேசிய தேரசாமே,
“பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனுக்கு வந்து இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவில் புதிய அத்தியா யத்தைத் துவக்கினார். இந்தியாவுடனான வர்த்தக உறவு முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போது நானும் அடுத்த மாதம் (நவம்பர் 6ந் தேதி முதல் 8ம் தேதி வரை) இந்தியா செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இப்பயணத்தில் இருதரப்பு வர்த்த உறவு மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன்.” என்றார்.
“ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிறகு, அந்த அமைப்பைச் சாராத ஒரு நாட்டுக்கு, நான் செல்வது இதுவே முதல் முறை.
பிரிட்டன் சமுதாயத்தில் இந்திய வம்சாவளியினர் முக்கிய இடம் வகிக்கின்றனர். பிரிட்டன் பிரதமராக தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு பெருமை.”
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சு இந்திய வம்சாவளியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
london1