டெல்லி: லோக்சபா தேர்தலில் 370க்கும் குறைவாக தொகுதிகளை பெற்று பாஜக வெற்றி பெறும் தேர்தல் வியூக சாணக்கியதான  பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார். அதுபோல,  நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 305 இடங்களில் வெற்றி பெறும் என்று அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகரும், ‘ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்’ நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனரான இயான் ஆர்தர் பிரம்மர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 கட்டதேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில்,  6வது கட்ட தேர்தல் மே 25ந்தேதியும், 7வது கட்ட தேர்தல் ஜூ1ந்தேதியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்டதொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தலைவர்கள், பாஜக 100ஐ தாண்டாது, நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரா, பிரசாந்த் கிஷோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  பாஜகவின் 370 இடங்களை இலக்காகக் கொண்டதை ஒரு “புத்திசாலித்தனமான” நடவடிக்கை என்று  கூறியதடன்,  இந்த தேர்தலில் 370க்கும் குறைவான தொகுதிகளிலேயே பாஜக வெற்றி பெறும் என்று  கணித்துள்ளார்.

மக்களிடையே பாஜக மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும் போது, அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், பங்குச் சந்தை அவர்களைத் தண்டிக்கவில்லை. இந்தக் கண்ணோட்டத்தில், பாஜக 370 இடங்களுக்குக் குறைவாகப் பெற்றால், இது பேசப்படும் புள்ளியாக மாறும். சந்தைகள். இதையும் பிரதிபலிக்கலாம்” என்று  கூறிய பிரசாந்த் கிஷோர்,   நடந்து வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று கணித்துள்ளார்.

543 இடங்களைக் கொண்ட மக்களவையில், 272 என்பது ஒரு கட்சி அல்லது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க கடக்க வேண்டிய பாதியாகும். இருப்பினும், பிஜேபி 320 இடங்களைப் பெற்றாலும் (அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் 370 மதிப்பெண்களுக்குக் குறைவாக இருந்தால்), காவி கட்சி ஆட்சி அமைக்கும் என்று திரு கிஷோர் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட,  நாள் முதல்,  கடந்த மூன்று-நான்கு மாதங்களில்,  ‘370’ மற்றும் ‘400’ ஐ மையமாகக் கொண்டே விவாதம் நடைபெற்றது, இது ஒரு BJP உத்தி அல்லது எதிர்க்கட்சியின் பலவீனம் என்று கூறியவர், , ஆனால் BJP 272 இல் இருந்து 370 க்கு கோல்போஸ்ட்டை முழுவதுமாக மாற்றியுள்ளது. இது BJP க்கு பலனளித்தது. இப்போது, மோடி ஜி தோற்கடிக்கப்படுவார் என்று யாரும் கூறவில்லை, தங்களுக்கு 370 இடங்கள் கிடைக்காது என்று கூறுகிறார்கள்” என்ம் தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர், கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய நிலையில், அதற்கு முன்னதாக ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக பணியாற்றி ஆட்சியையை கைப்பற்ற வைத்தவர். இவர் ஏற்கனவே  2014 தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகரும், ‘ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்’ நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனரான இயான் ஆர்தர் பிரம்மர்  தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக 305 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்து உள்ளார். இந்தியாவில், தேர்தல்  நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும்  நடைபெற்று வருவதாக கூறியதுடன்,  உலகில் உள்ள அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட இந்தியா சுமூகமான மாற்றத்தை கொண்டுள்ளது. அதன் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான இந்திய தேர்தல் செயல்முறை பாராட்டுக்குரியது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட நாடு. ஜப்பான், இந்தியாவுடன் வலுவான நட்புறவு வைத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை நெருங்கி வருகின்றன. என்றவர், பிரதமர் மோடியின் நிலையான சீர்திருத்தத்தின் பின்னணி, வலுவான பொருளாதார திறன் ஆகியவற்றால் 3-வது முறையாக மோடி வெற்றி பெற போகிறார்.

இந்த தேர்தலில் பா.ஜ.க. சுமார் 305 இடங்களில் வெற்றி பெறும். இந்த எண்ணிக்கையில் 10 தொகுதிகள் முன் பின்னாக வெற்றி அமையலாம் என்று எங்களது யூரேசியா குழு தெரிவிக்கிறது. அதாவது பா.ஜ.க. வெற்றி எண்ணிக்கை 295 முதல் 315 தொகுதிகள் வரை இருக்கும் என்றவர், 2030-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.