டில்லி:

அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விதிவிலக்கு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் விதிமுறையின்படி அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை பெற முடியாது. மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு நிதி மசோதா மூலம் எப்சிஆர்ஏ சட்டத்தைத் திருத்தியது. கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவதை சுலபமாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இச் சட்டத்தில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு கட்சிகள் பெற்ற வெளிநாட்டு நன்கொடைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதில்லை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய திருத்த மசோதாவில் 1976 ஆகஸ்ட் 5-ம் தேதியில் இருந்து கட்சிகளுக்கு விதிவிலக்கு என்று மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.