ஜெய்ப்பூர்:

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.42 மணிக்கு உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்ட பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கியது. மேம்படுத்தப்பட்ட மற்றும் வழிநடத்தும் ஆற்றலுடன் இந்த ஏவுகணை தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது. நாட்டின் பாதுகாப்புக்கு இது மேலும் ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்,

290 கி.மீ., தொலைவுக்கு சென்று தாக்க கூடிய பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. சுகோய் ரக விமானங்களிலிருந்து ஏவும் சோதனை கடந்த நவம்பரில் முதன்முறையாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.