புதுடெல்லி:

2019-ம் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு வாக்குறுதி பிரதானமாக அமையும் என்று தெரிகிறது.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது பிரதானமாக இருக்கும்.

இதே வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக, அதனை நிறைவேற்றவில்லை. இதனால் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இத்தகைய அறிவிப்பு இருக்கும்.

பெண்களை ஈர்க்கும் வகையில் 33% இட ஒதுக்கீடு அறிவிப்பு இருக்கும். கட்டாய மருத்துவ மசோதா, குறைந்தபட்ச வேலை வாய்ப்பு உறுதி திட்டம் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் கவுடா, குமாரி செலீஜா, சாம் பிட்ரோடா,சசிதரூர் உட்பட 19 பேர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.