சென்னை: மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின்  காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 9 பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், மயிலாடுதுறை தொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. நாளை வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் நிலையில், மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்களிடையே பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில்,  மயிலாடுதுறை தொகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை தனது ஏழாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதில், தமிழகத்தில் மயிலாடுதுறை தொகுதியில் வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.