சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை  அதிமுக தலைமைகயத்தில் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி என மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இன்னும் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்பட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில்,  அதிமுக மட்டும்,  33 மக்களடிவ தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில்  போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.

இதையடுத்து, நேற்று (மார்ச் 20ந்தேதி) அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று  17 வேட்பாளர்களை கொண்ட அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

வேட்பாளர்கள் விவரம்:

  1. கோவை – சிங்கை ராமச்சந்திரன்
  2. திருச்சி – கருப்பையா
  3. பெரம்பலூர் – சந்திரமோகன்
  4. மயிலாடுதுறை – பாபு
  5. ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்
  6. தருமபுரி – அசோகன்
  7. திருப்பூர் – அருணாசலம்
  8. நீலகிரி – லோகேஷ்
  9. வேலூர் – பசுபதி
  10. திருவண்ணாமலை – கலியபெருமாள்
  11. கள்ளக்குறிச்சி – குமரகுரு
  12. சிவகங்கை – சேகர் தாஸ்
  13. நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
  14. புதுச்சேரி – தமிழ்வேந்தன்
  15. தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
  16. கன்னியாகுமரி – பசிலியா நசரேத்
  17. விளவங்கோடு இடைத்தேர்தல் – ராணி