சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக எம்.பி. கனிமொழி மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய தொகுதிகளில் 6 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.

திமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி, அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபாட்டு வருகிறார். இந்த நிலையில்,  இண்டி  கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும்  தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதுகுறித்த  தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.  ஏப்ரல்-19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.  அதன் விவரம் வருமாறு:-

மார்ச் 28-ந்தேதி (வியாழக்கிழமை)-கரூர், ஈரோடு, 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 1-ந் தேதி (திங்கட்கிழமை)-திருநெல்வேலி, தென்காசி, 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-கன்னியாகுமரி, 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.