திருச்சி: அதிமுக கூட்டணியில், அதிமுக, தேமுதிக உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், துளசி வாசம்  மாறினாலும் தவசி வார்த்தை மாறாது என பஞ்ச் டயலாக் பேசினார். மதுரையில் அதிமுகவை விமர்சித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

திருச்சியில்  அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.  40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர்  கூட்டத்தில் பேசிய   தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும் என்றார்7.

முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.  ஆனால், சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை என்று குற்றம் சாட்டியதுடன்இ, நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்றார்.

தொடர்ந்து பேசியவர், தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ? தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும் க்நும், இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தேமுதிக அப்படி கிடையாது. துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது என கூறினார்.