ராஞ்சி:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஓராண்டுக்குள் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை செயல்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ஜார்கண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என மோடி அளித்த வாக்குறு நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் இது பற்றி பேசிய மோடி, தற்பாது வாய் திறப்பதில்லை.

அரிசிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,500 தருவோம் என் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளித்தோம். சொன்னபடி நிறைவேற்றினோம்.
விவசாய கடன் தள்ளுபடியையும் உறுதியளித்தபடி நிறைவேற்றினோம். அதேபோல் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தையும் நிறைவேற்றுவோம்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற போதிய நிதியை திரட்டுவோம். சந்தையில் தேவையை அதிகரித்து இந்திய பொருளாதாரத்தை இந்த திட்டம் ஊக்கப்படுத்தும்.

இந்த திட்டத்தை அறிவித்தபோது, எப்போது வரை இந்த திட்டம் தொடரும் என கேள்வி எழுப்பப்பட்டது.
பயனாளிகளின் மாத வருமானம் ரூ.12 ஆயிரத்தை எட்டும் வரை இந்த திட்டம் தொடரும்.

நாட்டில் உள்ள 20 தொழிலதிபர்களுக்கு மோடி அரசு பெரிய தொகையை செலவழிக்கிறது.
கடன் தள்ளுபடி, ஊழல் மூலம் தொழிலதிபர்கள் சிலருக்கு சாதகமாக மோடி நடந்து கொள்கிறார்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

ராகுல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஜார்கண்ட் பாஜக செய்தி தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ, காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் பெரும் மோசடி. வறுமையை ஒழிப்போம் என கடந்த 50 ஆண்டுகளாக 4 தலைமுறைகளாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.