கோவை: லோக்சபா தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாதவர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கோவை பாராளுமன்ற தொகுதி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான அண்ணாமலை இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக  கோவை காவல் தெய்வம்  கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

முன்னதாக பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களுடன் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்த அண்ணாமலை,  கோவையின்   அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்

கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது.  பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,  கோனியம்மனிடம், கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை; கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்’ என்றார்.  கோவை மக்கள் அனைவரும் என் மீது அன்பை பொழிகிறார்கள். கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுடன் தான் பா.ஜ., போட்டி.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் 4 முறை பேசியுள்ளார், மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என மாநில அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்தது.

இதுவரை கோவை தொழில்துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி., பேசியிருக்கிறாரா?  கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை; கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னை பக்குவப்படுத்தியது. இங்கள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் என்ஐஏ காவல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.