சென்னை:

திமுக அணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13ம் தேதி நேர்காணல்  நடைபெறும் கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.‘

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும்  ஏப்ரல் 18 ம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29 ஆம் தேதி என தேர்தல் ஆணையர் சுனில் அரோராஅறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், 39 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கிய தேமுதிக, வரும் 13ந்தேதி முதல் நேர்க்காணல் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளது.

இது குறித்து தேசிய முற்போக்கு திராவிடகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் சார்பில் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக தாங்கள் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 13 ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில், ஒரே நாளில் நடைபெற இருக்கிறது. எனவே, விருப்ப மனு கொடுத்துள்ளவர்கள் தாங்கள் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரில் வரவேண்டும். வரும் போது, கழக உறுப்பினர் அட்டை வாக்களர் அட்டை, கல்வி சான்றிதல், தனித் தொகுதிக்கு ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.