இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள படம் பூமராங். மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரதன் இசை அமைத்த இந்த படம் நதி நீர் இணைப்பு உள்ளிட்ட சமூக பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது . இது மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச்.8) ரிலீசாகி நல்ல வரவேர்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பூமராங் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் டிவி கைப்பற்றியுள்ளது.