சென்னை:

மிழகத்தில் ஜூலை 13ம் தேதி  லோக் அதாலத் நடத்தப்படும் என்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்து உள்ளது.

அப்போது,  சாலை விபத்துகளுக்கான இழப்பீடு, மின்சார பயன்பாடு, வீட்டுவரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் தொடர்பான ரிட் மனுக்கள், செக் மோசடி தொடர்பான வழக்குகள் விசாரித்து உடனடியாக தீர்வு காணப்படும்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுரைப்படி, தமிழகத்தில் சென்னை உயர்நீதி மன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் மாவட்டங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் வரும் 13-ம் தேதி சனிக்கிழமையன்று மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

அன்றைய தினம், வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ளும் வகையில் தீர்வு காணலாம். மேலும்,சாலை விபத்து வழக்குகளில் இழப்பீடு, சம்பந்தப்பட்ட நிலுவையிலுள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சாரப் பயன்பாடு, வீட்டு வரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்பந்தமான ரிட் மனுக்கள், காசோலை மோசடி, மண விலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர பொதுப் பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதற்கென நியமிக்கப்பட்டு உள்ள நீதிபதிகள், வழக்கு விசாரித்து, உடனே பைசல் செய்யப்படும்.

பொதுமக்கள் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்ற விசாரணையை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்ககளுக்கு தீர்வு காணலாம். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.