சென்னை:

யுதப்படை காவலர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கின் உத்தரவை செயல்படுத்தாது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்படும் வரும் ஊதியத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி  ஆயுதப்படை காவலர்கள் ராம்குமார், ராமச்சந்திரன் உள்பட 157 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்ததும், மனுதாரர்களின் கோரிக்கையை பரீசிலித்து ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு உயர்நீதி மன்ற நீதிபதி டி.ராஜா அரசுக்கு உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்ததை தொடர்ந்து, ஆயுதப்படை காவலர்கள் 157 பேரும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில்  தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி. ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ப மறுத்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை  டிஜிபி ஆகியோர்  நான்கு வாரத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைத்தார்.