தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 8.99 லட்சம் வழக்குகள், ரூ. 21.80 கோடி அபராத வசூல்!

Must read

சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக  இதுவரை  8.99 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளதாகவும், ரூ. 21.80 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி தமிழகத்தில் லாக்டவுன் அமலில் உள்ளது.  இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை  மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை (ஆகஸ்டு 73ந்தேதி வரையிலான நிலவரம்) ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து  ரூ.21.80 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கை மீறிய 6.94 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் 9.96 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பாக 8.99 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

More articles

Latest article