Skip to content
  • Fri. Sep 18th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

தினசரி பாதிப்பில் தொடர்ந்து உலகின் முதலிடத்தில் இருந்து வரும் இந்தியா… ஒரே நாளில் 77,266 பேர் பாதிப்பு

Aug 28, 2020

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளல்,  மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,87,501  ஆக உயர்நதுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கட்ந்த 24 மணி  நேரத்தில் மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பாதிப்பாக கருதப்படுகிறது. அதுபோல,  உலகிலேயே தினசரி பாதிப்புகளில் இந்தியா கடந்த சில நாட்களாக முதலிடத்திலும் இருந்து வருகிறது. 

 மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 77,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பால் 7 லட்சத்து 42 ஆயிரத்து 023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து  60,177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1,057 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61,529 ஆக உயர்வடைந்து உள்ளது .
நாடு முழுவதும் நேற்று மட்டும்  9,01,338 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 3,94,77,848 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

Post navigation

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 8.99 லட்சம் வழக்குகள், ரூ. 21.80 கோடி அபராத வசூல்!
28/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer