ஊரடங்கு மீறல்: 24மணி நேரத்தில் 21லட்சம், இதுவரை ரூ.15.65 கோடி அபராதம் வசூல்…

Must read

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை அபராதமாக  ரூ.15,65,25,485 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.21,07,200 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. நோய்ததொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை 5கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை உள்பட 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில்,  ஊரடங்கு உத்தரவை மீறி, அவசியமின்றி வெளியே சுற்றுவோர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றன்ர.

அதன்படி,  தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 10,360 பேர் கைது செய்யப்பட்டு  விடுவிக்கப்பட்டுள்ளனர். 10,043 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில்  8644 வழக்குகளும்,  ரூ.21,07,200  அபராதமும் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 7,44,666 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை, 6,82,385 வழக்குகளும்,  ரூ.15,65,25,485 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும்,  வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு  வருவதாகவும்,  கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article