சென்னை:

சென்னையில்   ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை,  அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்களிடையே பதற்றம் உருவாக்கி உள்ளது.

தமிழகத்தில் நேற்று (26ந்தேதி)  ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில்  1,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 49,690ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 28,823  பேர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,136. இதுவரை 730 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  ராயபுரம் – 7211, தண்டையார்பேட்டை – 5989, தேனாம்பேட்டை – 5655,  அண்ணா நகர் – 5397, கோடம்பாக்கம் – 5316, திரு.வி.க. நகர் – 4132,  அடையாறு – 3057, மாதவரம் – 1524, ஆலந்தூர் – 1229, அம்பத்தூர் – 1982 பேருக்கு கொரோனா வளசரவாக்கம் – 2201, திருவெற்றியூர் -1912 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.